பள்ளிகள் இயங்கும் நாட்கள் 185 ஆக மாற்றம்!

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170லிருந்து 185 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகள் நடைபெற உள்ளன. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு கற்பித்தல் முறையில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 

அந்தவகையில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170 லிருந்து 185 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

மேலும் க்யூ ஆர் கோடு பயன்படுத்தி, மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment