சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவி பறிப்பு விதிமுறை

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள் கண்டன
தீர்மானம் கொண்டு வரக்கோரி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர்.

ஆலோசனை

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, 4 நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து, அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்தது. ஆனால், தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. 

இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்ட நிலையில், தலைமை நீதிபதிக்கு எதிராக 7 எதிர்க்கட்சிகள், கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர். 

முன்னதாக குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சி தலைவர்களுடன் தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், முஸ்லிம் லீக் கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் கையெழுத்து போட்டுள்ளனர்.

எதிர்பார்ப்பு

இந்த தீர்மானம் தொடர்பாக குலாம் நபி ஆசாத் கூறுகையில், தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரும் மனு மீது 71 எம்.பி.,க்கள் கையெழுத்து போட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் ஓய்வுபெற்றுவிட்டனர். இதனை வெங்கையாவிடம் அளித்துள்ளோம். தீர்மானம் கொண்டு வரவதற்கு தேவையான ஆதரவு உள்ளது என அவரிடம் கூறியுள்ளோம். இதனை ஏற்பதும், நிராகரிப்பதும் அவரின் முடிவு. நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

கேள்வி

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், இந்த நாள் மீண்டும் வரக்கூடாது என எதிர்பார்க்கிறோம். நீதித்துறை சுதந்திரம் முக்கியமானது. நீதிபதிகள், நீதித்துறையின் மாண்பை நிலைநிறுத்த வேண்டும். தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட போதே, சில வழக்குகளை எவ்வாறு கையாள போகிறார் என்பது குறித்த கேள்விகள் எழுந்தன. ஜனநாயகத்தை காக்கவே தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தலைமை நீதிபதியின் தவறான நடவடிக்கைக்காகவும் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விதிமுறை

* 100 லோக்சபா மற்றும் 50 ராஜ்யசபா எம்.பி.,க்கள் கையெழுத்து போட வேண்டும்
* இதனை அவை தலைவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்
* ஏற்று கொள்ளப்பட்டால், விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
* விசாரணையில் நீதிபதி தவறு செய்திருந்தால் நிருபிக்கப்பட்டால், தீர்மானம் கொண்டு வரப்படும்
* 3 ல் 2 பங்கு ஆதரவு கிடைத்தால் தீர்மானம் நிறைவேறும்
* தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். 
* அவர் ஒப்புதல் அளித்தால் நீதிபதி பதவி பறிக்கப்படும்.

1 comment:

 1. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  ReplyDelete