பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மாணவிகளை பாலியல் செயலுக்குத் தூண்டியதாக கைது செய்யப்பட்ட
தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போனில் ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி என்பவர், மாணவிகளை பாலியல் செயலுக்குத் தூண்டுவது போன்ற செல்போன் உரையாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து, மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பேராசிரியை நிர்மலாதேவியை நேற்று அவரது வீட்டிற்கு சென்று அதிரடியாக கைது செய்தனர்.

போலீஸ் பிடியில் பேராசிரியை நிர்மலா தேவி


அவர் கைதுசெய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, பேராசிரியை மீது உயர்மட்ட விசாரணை நடத்தக்கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணையை ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் நடத்துவார் என்றும் ஆளுநர் அறிவித்தார்.


இதன்பின், கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பேராசிரியையிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3 செல்போன்களின் மெமரி கார்டுகளை ஆய்வு செய்தததில், அதில் ஏராளமான இளம்பெண்களின் புகைப்படங்களும், பல முக்கிய பிரமுகர்களின் தொடர்புகளும் இருந்ததைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்கள் பற்றியும் அவருடன் தொடர்பில் இருந்த பிரமுகர்கள் பற்றியும் அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த வழக்கை விரைந்து முடிக்க, இந்த வழக்கை தற்போது சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளனர். #nirmala devi

1 comment:

 1. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  ReplyDelete