வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்பு

பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டியூட் என்பது வனங்களைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை செய்யும் கல்வி நிறுவனம். இது டேராடூனில் உள்ளது. இங்கு காலியாக உள்ள 98 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம் : எலக்ட்ரீசியன், பிளம்பர், ஏ.எம்.ஓ., கார்பென்டர், வெல்டர் பிரிவிலான டெக்னீசியனில் 10ம், பீல்டு, லேப் ரிசர்ச் டெக்னீசியனில் 45ம், மெயின்டனென்ஸ் டெக்னிக்கல் அசிஸ்டென்டில் 3ம், ஸ்டோர் கீப்பரில் 1ம், ஆர்டினரி கிரேடு டிரைவரில் 3ம், லோயர் டிவிஷன் கிளார்க்கில் 19ம், பாரஸ்ட் கார்டில் 2ம், மல்டி டாஸ்கிங் ஸ்டாப்பில் 15ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : விண்ணப்பதாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டெக்னீசியன் பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ., சான்றிதழ் படிப்பும், பீல்டு, லேப் ரிசர்ச் பிரிவுக்கும், மெயின்டனென்ஸ் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஸ்டோர் கீப்பர், லோயர் டிவிஷன் கிளார்க் ஆகிய பிரிவுகளுக்கு, பிளஸ் 2வில், 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், மல்டி டாஸ்கிங் ஸ்டாப், ஆர்டினரி கிரேடு டிரைவர் ஆகியவற்றுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் சிறப்புத் தகுதிகளும் தேவைப்படும். 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ. 300. 

கடைசி நாள் : 2018 ஏப்., 21. 

விபரங்களுக்கு: https://recruitment.fri.res.in

0 comments:

Post a Comment