துப்புரவு பணியாளரின் காலில் விழுந்த கிரண்பேடி

புதுச்சோி துணை நிலை ஆளுநா் கிரண்பேடி தன் காலில் விழுந்ததற்காக பதிலுக்கு பெண் துப்புரவு பணியாளரின் காலில் விழுந்து வணங்கினாா்.

kiranbedi get blessing on the feet of the cleaning staffபுதுச்சோியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெண் துப்புரவு பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் நேற்று (வெள்ளிக் கிழமை) மாலை புதுவை ஜிப்மாில் நடைபெற்றது. மருத்துவ முகாமை புதுவை துணைநிலை ஆளுநா் கிரண்பேடி தொடங்கி வைத்து. துப்புரவு பணியாளா்களுக்கு மருத்துவ அடையாள அட்டையை வழங்கினாா்.
அடையாள அட்டை வழங்கப்பட்ட போது பெண் துப்புரவு பணியாளா் ஒருவா் மேடையில் நின்று கொண்டிருந்த கிரண்பேடியின் காலில் விழுந்தாா். உடனடியாக கிரண்பேடி, துப்புரவு பணி செய்து நகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் உங்களது காலில் நான் தான் விழவேண்டும் என்று கூறி துப்புரவு பணியாளரின் காலில் பதிலுக்கு விழுந்தாா்.

0 comments:

Post a Comment