காவிரி போராட்டத்திற்கு பணிந்தது ஐபிஎல் நிர்வாகம்: சென்னையில் நடைபெறவுள்ள அனைத்து போட்டிகளும் மாற்றம்

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

டெல்லியில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

சென்னையில் ஐபிஎல் போட்டியை நடக்க விடமாட்டோம் என தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன
தமிழகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்புக்கு ஐபிஎல் நிர்வாகம் பணிந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி பிரச்சனை தீரும் வரை ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்த கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னையில் நேற்று தீவிர போராட்டம் நடைபெற்றது.

போராட்டம் காரணமாக 7 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் தான் போட்டியை நடத்த முடிந்தது.

6 போட்டிகள் மாற்றம்

சி.எஸ்.கே-வுடன் இதர அணிகள் மோதும் 7 போட்டிகளை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது

ஒரு போட்டி முடிந்துள்ள நிலையில் எஞ்சிய 6 ஐபிஎல் போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment