‘ஏர்செல்’ வாடிக்கையாளர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.,

‘ஏர்செல்’ வாடிக்­கை­யா­ளர்­கள், ‘நம்­பர் போர்ட்­ட­பி­ளிட்டி’ வசதி மூலம், பி.எஸ்.என்.எல்., சேவைக்கு மாறு­வ­தில் ஏற்­பட்ட தொழில்­நுட்ப சிக்­கல்­க­ளால், பெரும்­பா­லான வாடிக்­கை­யா­ளர்­களை, பி.எஸ்.என்.எல்., இழந்­துள்­ள­தாக புகார் எழுந்­துள்­ளது.ஏர்செல் நிறு­வ­னத்­தில் ஏற்­பட்ட சிக்­னல் கோளாறு கார­ண­மாக, சில மாதங்­க­ளாக, அதன் வாடிக்­கை­யா­ளர்­கள் பல இன்­னல்­க­ளுக்கு ஆளா­கி­னர்.

வாடகை பாக்கிஇதற்கு கார­ணம், பிற நிறு­வ­னங்­களின் டவரை வாட­கைக்கு எடுத்­தி­ருந்த ஏர்­செல், பல கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்­தது தான். இதை­ய­டுத்து, ஒரு கட்­டத்­தில், ஏர்­செல் சேவை­கள் முடக்­கப்­பட்­டன.அடுத்­த­கட்­ட­மாக, மார்ச், 15ம் தேதி­யு­டன் ஏர்­செல் சேவை­கள் அனைத்­தும் நிறுத்­தப்­பட்­டன. இதைத் தொடர்ந்து, நம்­பர் போர்ட்­ட­பி­ளிட்டி எனும் பெயர்வு வசதி மூலம், பிற நிறு­வ­னங்­க­ளுக்கு தங்­கள் நெட்­வொர்க்கை மாற்­றிக் கொள்­ளு­மாறு, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஏர்­செல் நிறு­வ­னம் வேண்­டு­கோள் விடுத்­தது.அதற்­கான பிரத்­யேக போர்ட்­டல் எண்­களை பெற்று, அதன் மூலம் வேறு நிறு­வ­னங்­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்­கள் மாறத் துவங்­கி­னர்.இதில், ஏர்­செல் அனுப்­பிய போர்ட்­டல் கோடு மூலம், பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னத்­துக்கு மாறு­வ­தில் பல்­வேறு சிக்­கல்­கள் நில­வின.பி.எஸ்.என்.எல்., சேவை­யில் இணைய விரும்­பும், வாடிக்­கை­யா­ளர்­களின் போர்ட்­டல் கோடு தவறு என, அதை ஏர்­செல் நிறு­வ­னம் தொடர்ந்து நிரா­க­ரித்­தது; பல­முறை முயற்சி செய்­தும் பலன் ஏதும் இல்லை.

புகார் ஆனால், ‘ஏர்­டெல், வோட­போன்’ போன்ற வேறு நிறு­வ­னங்­க­ளுக்கு மாற, வேண்­டு­கோள் விடுக்­கப்­பட்­டால், அவர்­க­ளது விண்­ணப்­பம் உட­ன­டி­யாக ஏற்­கப்­பட்டு சேவை வழங்­கப்­ப­டு­கிறது.இது தொடர்­பாக, தொலை தொடர்பு ஆலோ­ச­னைக் குழு­வின் முன்­னாள் உறுப்­பி­னர், சத்­தி­ய­பா­லன் கூறி­ய­தா­வது:

ஏர்­செல் பிரச்­னை­யால் பெரும்­பா­லான வாடிக்­கை­யா­ளர்­கள், பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னத்­துக்கு மாற விண்­ணப்­பித்­த­னர். ஆனால், போர்ட்­டல் கோடு தவறு எனக் கூறி, அவற்றை நிரா­க­ரித்­தது. தொடர்ந்து முயற்சி செய்­தும் பலன் இல்­லா­த­தால், வாடிக்­கை­யா­ளர்­கள் வேறு நெட்­வொர்க்­கு­க­ளுக்கு மாறி­விட்­ட­னர்.இது தொடர்­பாக, பி.எஸ்.என்.எல்., அதி­கா­ரி­கள் எந்த முயற்­சி­யும் எடுக்­க­வில்லை. இந்த விஷ­யத்­தில் அதி­கா­ரி­கள் முனைப்பு காட்­டா­த­தால், லட்­சக்­க­ணக்­கான வாடிக்­கை­யா­ளர்­களை, பி.எஸ்.என்.எல்., இழந்­துள்­ளது. இதற்கு கார­ண­மா­னோர்­ மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

இந்த புகார் குறித்து, பி.எஸ்.என்.எல்., பொது மேலா­ளர் வெங்­க­டே­சன் கூறி­ய­தா­வது:ஏர்­செல் வாடிக்­கை­யா­ளர்­கள், போர்ட்­ட­லில் மாறு­வ­தில், அனைத்து நிறு­வ­னங்­க­ளுக்­கும் சிக்­கல்­கள் இருந்­தன. இதில், பி.எஸ்.என்.எல்.,க்கு அதிக பிரச்னைகள் இருந்­தன.

இதில் ஏர்­செல் நிறு­வ­னத்­துக்­கும் பங்கு இருப்­ப­தால், அவர்­கள் மீது தொலை­தொ­டர்பு துறை­யி­டம் புகார் அளித்­தி­ருக்­கி­றோம்; அவர்­கள் விசா­ரணை செய்து வரு­கின்­ற­னர்.இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

0 comments:

Post a Comment