பாலியல் வன்கொடுமை சட்ட திருத்தம்: முழு விவரம்

நாடு முழுவதும் அதிகரித்துள்ள பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எதிரொலியாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச்
சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இச்சட்டதிருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

16 வயதுக்கு உட்பட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான குறைந்தபட்ச சிறை தண்டனை 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக இரட்டிக்கப்பட்டுள்ளது. இதனை ஆயுள்தண்டனையாக நீட்டிக்கவும் செய்யலாம்.
16 வயதுக்கு உட்பட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை.
12 வயதுக்கு உட்பட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான குறைந்தபட்ச சிறை தண்டனை 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை.
cabinet approves the promulgation of the criminal law (amendment) ordinance, 2018 for death to child rapists12 வயதுக்கு உட்பட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை.விரைந்து நீதி கிடைக்க...


பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை 2 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 2 மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய 6 மாத அவகாசம்.
ஜாமீன் வழங்குவதில் கட்டுப்பாடுகள்

16 வயதுக்கு உட்பட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்படாது.
16 வயதுக்கு உட்பட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் மனு மீது முடிவு எடுப்பதற்கு 15 நாட்கள் முன்பாக அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
மேலும் சில அம்சங்கள்

நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச உயர்நீதிமன்றங்களில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
பாலியல் வன்கொடுமை வழக்குளைக் கையாள அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சிறப்பாக நியமிக்கப்படுவர்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விசாரணைக்காக காவல் நிலையம் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறப்பு தடயவியல் கருவிகள் அளிக்கப்படும்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணைக்காக குறிப்பிட்ட காலத்திற்கான சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணைக்கான சிறப்பு தடயவியல் ஆய்வுக் கூடங்கள் உருவாக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 3 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்.
தகவல் தொகுப்பு


தேசிய குற்ற ஆவணக் காப்பம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் பற்றிய தகவல்களை தொகுத்துவைக்கும்.
இந்தத் தகவல்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினருடன் தேவையானபோது பகிர்ந்துகொள்ளப்படும்.
பாதிகப்பட்டவர்களுக்கு உதவி


மாவட்டங்கள் தோறும் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும்.

1 comment:

 1. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  ReplyDelete