தலையில் சொட்டை விழாமல் தடுக்க உதவும் உணவுப் பொருட்கள்!

தலையில் சொட்டை விழுந்த பிறகு, அதுவும் பார்வைக்கு அழகாகத் தான் தெரியலாம். ஆனால் அதனை அனைவரும் ஒரு குறையாகவே பார்க்கின்றனர். விலைமதிப்புள்ள முடி உதிர்வு சிகிச்சை பெற இயலாதவர்களுக்கு உதவும் உணவுப் பொருள் தீர்வுகளை இங்கே காணலாம்.


முட்டை மற்றும் பால் பொருட்கள்


முடி வளர்ச்சிக்கு பயோடின்(விட்டமின் பி7) மிகவும் உதவுகிறது. முட்டைகள், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களில் பயோடின் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முடி வளர உதவும் புரோட்டீன், விட்டமின் பி12, இரும்பு, ஜிங்க், ஒமேகா 6, கொழுப்பு அமிலங்கள் இதில் காணப்படுகின்றன.


ஓட்ஸ்

சொட்டை விழுவதை தவிர்க்க உதவும் உணவுப் பொருட்களில் ஓட்ஸ் முக்கியமானது. இதில் நார்ச்சத்து, ஜிங்க், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. முடி வேர்களை வலுப் பெறச் செய்யும் பீட்டா குளுகான் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாதாம் பருப்பு

சொட்டை விழாமல் தடுக்க உதவும் உணவுப் பொருட்கள்!இதில் அதிகப்படியான பயோடின், மக்னீசியம் உள்ளது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. தொடர்ச்சியான பாதாம் உட்கொள்ளல் உறுதியான, ஆரோக்கியமான, வேகமான முடி வளர்ச்சியை அளிக்கிறது.
வால்நட்


இதில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அதிலுள்ள விட்டமின் பி7 முடி உதிர்வை தடுத்து, வேர்களை வலுவாக்கி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி உதிர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு வால்நட் தீர்வாக அமையும்.#சொட்டை,#sottai

1 comment:

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete