சமூக தளத்தில் பெண் போர்வையில் வீரர்களுக்கு வலை

துணை ராணுவப் படையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளின் சமூக வலைதளப் பக்கங்களில், பெண்கள் பெயரில் நட்பு கோரிக்கை கொடுத்து, அவர்களிடம் இருந்து, நம் ராணுவ ரகசியங்களை பெற,
சீனா மற்றும் பாகிஸ்தான் உளவு படையினர் சதித்திட்டம் தீட்டி வருவதாக, சமூக வலைதள கண்காணிப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் அதிகாரிகள், துணை ராணுவ வீரர்கள் கவனமாக செயல்படும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்தியா - சீனா மற்றும் இந்தியா - பாக்., எல்லைகளில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ - திபெத் எல்லை போலீஸ், எல்லை பாதுகாப்பு படை போன்ற துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் பணியாற்றும் வீரர்கள், அதிகாரிகள் உட்பட ஏராளமானோர், சமூக வலைதளங்களில் துடிப்பாக இயங்கி வருகின்றனர். 

கண்காணிப்புக் குழு

சீருடையுடன் அவர்களின் புகைப்படங்களை பதிவிடுவது, தினசரி நடக்கும் சுவாரஸ்யங் களை தெரிவிப்பது என, நிறைய தகவல்களை பகிர்கின்றனர். துணை ராணுவப் படையினரின், சமூக வலைதளக் கணக்குகளை கண்காணிப் பதற்காக, சிறப்பு கண்காணிப்புக் குழு ஒன்று இயங்கி வருகிறது. இந்த குழுவுக்கு, சமீபத்தில், அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. துணை ராணுவப்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி களின் சமூக வலைதளக் கணக்குகளுக்கு, நிறைய பெண்களிடம் இருந்து, நட்பு கோரிக்கை கள் வருவதை, அவர்கள் கவனித்தனர்.அதில் 

ஒரு பதிவில், 'நான் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி, இந்தியா -சீனா எல்லை பாதுகாப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதுகிறேன். அதற்கு, உங்கள் உதவி வேண்டும். 

அறிமுகம்

'உங்கள் தினசரி ராணுவ வாழ்க்கை குறித்து விளக்க முடியுமா? உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப் பட்டால் என்னிடம் தயங்காமல் கேளுங்கள்'என, அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்படி, பெரும்பாலான பெண்கள், தங்களை சுற்றுலா பயணியராக வும், ஆராய்ச்சி மாணவர்களாகவும் அறிமுகப்படுத்தி கொள்கின்றனர். இவர்கள், இந்திய எல்லையில் உள்ள இடங்கள் குறித்தும், அங்கு எப்படி செல்வது, பாதுகாப்பு எப்படி இருக்கும் என்றும் நிறைய கேள்விகள் கேட்கின்றனர்.இதை நம்பி பல அதிகாரிகள், தங்களுக்கு தெரிந்த தகவல்களை, அந்தப் பெண்களுடன் பகிர்கின்றனர். இது முற்றிலும் ஆபத்தானது என, கண்காணிப்புக் குழு எச்சரித்து உள்ளது.

ரகசியங்கள்

சீனா, பாக்., உளவுத்துறையினர், பெண்கள் பெயரில் சமூக வலைதள கணக்குகள் தொடங்கி, நம் எல்லை பாதுகாப்பு குறித்த ரகசியங்களை திரட்டுவதாக, அதிர்ச்சி தகவலை கண்காணிப்பு குழு வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து சர்வதேச இணையதள கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினரும், இணைய கொள்கை ஆலோசகருமான, சுபிமல் பட்டாசார்ஜி கூறியதாவது:

இது போன்ற சம்பவங்கள், இரண்டு, மூன்று ஆண்டுகளாக நடப்பதை கவனித்து வருகிறோம். குறிப்பாக, இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பணிபுரியும் வீரர்களுக்கு, பெண்களின் போர்வையில் நட்புகோரிக்கைகள் வருகின்றன.இது, நம் துணை ராணுவப்படை குறித்த, மூன்று முக்கிய ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக நடத்தப்படும் உளவு வேலை என தெளிவாக தெரிகிறது.

எல்லைப் பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருக் கும் வீரர்களின் எண்ணிக்கை, அவர்களின் நட மாட்டம், அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் குறித்த 

தகவல்களைப் பெறுவதே இவர்களின் நோக்கம்.எனவே, சமூக வலைதளங்களை பயன்படுத்தும் வீரர்கள், சீருடையுடன் கூடிய தங்கள் புகைப்படங்கள், பணி சார்ந்த விபரங் களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். நமக்கு முன் இருக்கும் மிகப் பெரிய இணையதள மிரட்டலாக, இதை பார்க்க வேண்டி உள்ளது. தெரியாத நபர்களிடம் இருந்து வரும் நட்பு கோரிக்கைகளை, வீரர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கப்படு கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


ஐ.எஸ்.ஐ., வலையில் சிக்கிய அதிகாரி

சமூக வலைதளம் மூலம் இரண்டு பெண்களி டம் இருந்து வந்த நட்பு கோரிக்கைகளை ஏற்ற விமானப் படை அதிகாரி ஒருவர், சிறை சென்ற சம்பவம் சமீபத்தில் நடந்தது.டில்லியை சேர்ந்தவர், அருண் மார்வா, 51. விமானப் படை அதிகாரியான இவர், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வந்தார். பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு, ஐ.எஸ்.ஐ., உளவாளிகள், கிரண் ரன்தவா மற்றும் மஹிமா படேல் என்ற பெண்கள் பெயரில், அருணுடன் நட்பாகினார்.


அவர்களை பெண்கள் என்று நம்பிய அருண், தொடர்ந்து அரட்டை அடித்து வந்தார். ஒரு கட்டத்தில், விமானப் படை பயிற்சி மற்றும் போர் உத்திகள் குறித்து அவர்கள் கேட்ட சில ஆவணங்களை, தன் மொபைல் போனில் படம் பிடித்து அனுப்பினார்.இத்தகவல் அம்பல மானதை தொடர்ந்து, அவரை விமானப் படை அதிகாரிகள் கைது செய்தனர்.

0 comments:

Post a Comment