காவிரிக்காக மெரினாவில் 29ஆம் தேதி பிரம்மாண்ட போராட்டம்

மெரினாவில் போராட்டம் நடத்த இருப்பதாக
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் முற்றுகையிடப்பட்டது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் வலியுறுத்தினர். மக்களின் போராட்டங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மத்திய அரசு எந்தவொரு ஜனநாயகப் போராட்டத்தையும் கண்டுகொள்ளவில்லை.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, வரும் ஏப்ரல் 29ஆம் தேதி சென்னை மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.#Cauvery issue on 29th april

0 comments:

Post a Comment