இந்தியாவிலிருந்து இடம் மாறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்

இந்தியாவில் இந்தாண்டு 10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருடங்களுக்கு பிறகு விளையாடுவதால் நம்மூர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தாண்டு போட்டிகள் கூடுதல் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியரசை கண்டித்து நடைபெற்ற தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் புறக்கணிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நடைபெற வேண்டிய போட்டிகள் தற்போது மஹாராஷ்டிராவின் பூனே நகரில் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் 2019ம் ஆண்டின் 12வது ஐபிஎல் போட்டிகள் அடுத்த வருடம் மார்ச் 29 முதல் மே 19 வரை நடைபெறுகின்றன. அப்போது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், 2019 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடத்தபடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், 12வது ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவிலும் நடக்கலாம் என சில தகவல்கல் தெரிவிக்கின்றன. 

இதுபற்றி பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், தென்னாப்பிரிக்காவை விட, ஐக்கிய அரபு அமீரகத்தின் நேரம் இந்திய ரசிகர்களுக்கு ஏதுவாக இருக்கும். அடுத்தாண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் துபாய், சார்ஜா, அபுதாபி போன்ற நகரங்களில் ஐபிஎல்-லை நடத்த பரிசீலித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.


ஏற்கனவே தேர்தல் மற்றும அரசியல் காரணங்களுக்காக, 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ முறையாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Posted in:

1 comment: