ரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது?

கடந்த, 2014, லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, ஒவ்வொரு இந்தியர் வங்கிக் கணக்கிலும்,
15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யும் தேதி தொடர்பான விஷயம், தகவல் உரிமை சட்டத்தின் வரையறைக்குள் வரவில்லை' என, பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

தகவல் உரிமை சட்ட ஆர்வலர், மோகன் குமார் சர்மா, 2016, நவ., 26ல், தகவல் உரிமைசட்டத்தின் கீழ், ஒரு மனு தாக்கல் செய்தார். பிரதமர் #நரேந்திர மோடி, 2014 லோக்சபா தேர்தலின்போது அறிவித்தபடி,ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில், 15 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்யும் தேதி குறித்து, அந்த மனுவில் கேட்கப்பட்டிருந்தது.


இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் அளித்த பதில்:தேர்தல் பிரசாரத்தின்போது, #பிரதமர் மோடி கூறியபடி, ஒவ்வொரு இந்தியர் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யும்தேதி, தகவல் உரிமை சட்டப்படி, 'தகவல்' என்ற வரையறைக்குள் அடங்காது. எனவே, இதுகுறித்த பதிலை அளிக்க இயலாது.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.இந்த பதில் திருப்திகரமாக உள்ளதாக, தலைமை தகவல் ஆணையர், ஆர்.கே.மாத்துார் கூறியுள்ளார்

தகவல் உரிமை சட்டப்படி, 'தகவல்' என்பது, ஆவணம், நினைவறிக்கை, இ -மெயில், கருத்து, ஆலோசனை, பத்திரிகை குறிப்பு, சுற்றோலை, உத்தரவு, ஒப்பந்தம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை குறிக்கும்.

0 comments:

Post a Comment