மடக்கும் தன்மை கொண்ட ஐபோன் தயாரிக்கிறது ஆப்பிள்

மடக்கும் தன்மை கொண்ட ஐபோனை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2020 ம் ஆண்டில் இந்த வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ள மடக்கும் தன்மை கொண்ட ஐபோன், டேப்லட்டாகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுகிறது. ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமான சாம்சங் மடக்கும் தன்மை கொண்ட டிசைன்களை அறிமும் செய்து வந்தாலும் கேலக்சி எக்ஸ் எனப்படும் அதிநவீன மடக்கும் தன்மை கொண்ட மாடலை தயாரிக்க இன்னும் தயாராகவில்லை என்று அறிவித்துள்ளது.


இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இன்னும் இரண்டே ஆண்டுகளில் மடக்கும் தன்மை கொண்ட ஐபோனுடன் கூடிய ஐ-பேடை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக அதன் ஆசிய பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

0 comments:

Post a Comment