காவிரி வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் வேண்டும்: மத்திய அரசு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி பிரச்னையில், மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழுவை, ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என, பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆறு வார அவகாசம், நேற்று முன்தினத்துடன்(மார்ச் 29) முடிந்தது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், காவிரி வாரிய உத்தரவில் கூறப்பட்டுள்ள ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தீர்ப்பை அமல்படுத்த 3 மாத அவகாசம் அளிக்க வேண்டும். தீர்ப்பாயத்தின் பரிந்துரைகளை மாற்றி நிர்வாக அதிகாரிகளையும் உள்ளடக்க முடியுமா? மத்திய அரசு உருவாக்கும் வாரியத்திற்கு, தீர்ப்பாயத்தை விட கூடுதல் கடமைகள் இருக்கலாமா? என கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment