ஐபிஎல் 2018- பெங்களூரு, டெல்லி அணியின் போட்டி அட்டவணை மாற்றம்

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடைப்பெற இருப்பதால் அன்றைய தினம் பெங்களூருவில் நடைப்பெற இருந்த பெங்களூரு - டெல்லி அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் 11வது சீசன் ஏப்ரல் 7ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளன. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிக்கு சொந்த மைதானமாக பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானம் உள்ளது.
ஐபிஎல் போட்டி அட்டவணைப்படி மே 12ம் தேதி பெங்களூரு - டெல்லி அணிகள் மோதும் போட்டி பெங்களுருவில் நடைப்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மே 12ம் தேதி கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நடைப்பெறுவதால் அந்த போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அதே சமயம் ஏப்ரல் 21ம் தேதி டெல்லியில் நடைப்பெற இருந்த டெல்லி - பெங்களூரு அணி போட்டி, பெங்களுருவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மே 12) - இடம் : டெல்லி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி டேர்டெவில்ஸ் (ஏப்ரல் 21) - இடம் : பெங்களூரு

0 comments:

Post a Comment